dddd

Advertisment

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் அணி, எடப்பாடி பழனிசாமி அணி என பிரிந்தது. பின்னர் டிடிவி தினகரன் அணி என தனியாக செயல்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி இணைந்தாலும் உள்ளுக்குள் தனித் தனியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர்.

கட்சி பொறுப்புகளில் பதவி, வேட்பாளர்கள் தேர்வில் திருப்தியில்லாமலேயே இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்கின்றனர் கட்சியினர். மேலும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது, தேமுதிகவை வெளியேற்றியது உள்ளிட்ட பல விசயங்களில் திருப்தி இல்லை என்று கட்சி பொறுப்புகளில் இருக்கும் பலர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

இந்தநிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான மணி என்கிற ராஜரத்தினம்கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த 1984இல் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

சமீப காலமாக மூத்த நிர்வாகிகளை தேர்தலின்போது கலந்தாலோசிப்பது இல்லை. இந்த அலட்சியப் போக்கு நீடிப்பதால் அதிமுகவில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகுவதாக முடிவு செய்துள்ளேன். இதேபோல் கட்சி தலைமை மீது மூத்த நிர்வாகிகள் பலரும் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.