அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வருகை தந்தனர். அப்போது பன்னீர்செல்வம் வருகை தந்தபோது, அவரின் ஆதரவாளர்கள் அவர் முகம் பொதித்த முகமூடிகளை அணிந்துகொண்டு ‘நாளைய முதல்வரே, அம்மாவின் ஆசிபெற்றுஅம்மா கைகாட்டிய முதல்வரே..’ என கோஷங்களை எழுப்பினர். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தபோது, அவரின் ஆதரவாளர்கள், ‘எங்கள் சாமனிய முதல்வரே வருக வருக..’ எனும்பதாகைகளுடன் 'நிரந்தர முதல்வரே வருக வருக.. 2021ன் தமிழக முதல்வரே வருக வருக..' என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.