அதிமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் திமுகவில் இணையப் போவதாக செய்திகள் வருகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தவர் ராஜகண்ணப்பன்.அப்போது இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இவரை கட்சியில் இருந்து ஜெயலலிதா ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று இருந்த போது இவர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டார். நடந்து முடிந்த நடாளுமன்ற தேர்தலின் போது சிவகங்கை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

admk

Advertisment

Advertisment

இதனால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த ராஜகண்ணப்பன் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார். தற்போது வேலூர் தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த உடன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வருகின்றன. இன்னும் ஒரு சில நாட்களில் அவரது முடிவை அறிவிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிகின்றனர். ஆனால் இன்னும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இது சம்மந்தமாக வரவில்லை. மேலும் திமுகவில் இணைவாரா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.