Advertisment

ரஜினி, கமல், விஜயகாந்தெல்லாம் ஏன் அப்படி சொல்லல? - ராஜேந்திரபாலாஜி கேள்வி!

admk ex minister talk about kalaignar pen statue

Advertisment

விருதுநகர் மேற்கு மாவட்டம் - ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள்அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியபோது, “விஜயகாந்த், கமல்ஹாசன் இவங்க எல்லாரும் முதன்முதலில் அரசியலுக்குவந்தபோது...ரஜினிகாந்தும் கூட எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கொண்டுவருவோம்னு மக்கள்கிட்ட வாக்குறுதி தந்தாங்க. கலைஞர் ஆட்சியைக் கொண்டுவருவோம்னு யாரும் சொல்லல.ஏன்னா.. எம்.ஜி.ஆர். ஆட்சிங்கிறது நல்லாட்சி;ஏழைகளுக்கான ஆட்சியா இருந்துச்சு.

இதையெல்லாம்உணர்ந்துதான் அந்த மூனுபேரும் அப்படி சொன்னாங்க. விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாதுன்னு சினிமாவுலபாடிட்டாங்க. வெற்று விளம்பரத்தால் எந்த ஆட்சியையும் நிரந்தரமாகத் தூக்கி நிறுத்த முடியாது. ஏட்டில் எழுதினால் இனித்துவிடாது. கையில் தந்து வாயால் சாப்பிட்டால்தான் இனிக்கும். வெறும் வாயாலேயே திமுகவினர் வடை சுடுறாங்க.

Advertisment

இந்த திமுக ஆட்சில பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு பென்சில், பேனாவாவது கொடுப்பாங்களான்னு எதிர்பார்த்தால், கலைஞருக்கு எழுதாதபேனாவுக்கு 80 கோடி செலவு பண்ணப்போறாங்களாம். கலைஞர் பேனாவுக்கு2கோடி ரூபாய் செலவு பண்ணிட்டு,மீதி இருக்கிற78 கோடி ரூபாய்லபள்ளி மாணவ மாணவிகளுக்கு பேனா, பென்சில் கொடுக்கலாமே!” எனப் பேசினார்.

kalaignar admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe