‘தலைவா.. என்னால் விலகியிருக்க முடியவில்லை..’ ஆதங்கத்தில் அன்வர் ராஜா

ADMK ex Member Anwar Raja poster viral

கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்ததாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அன்வர்ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த மாதம் நீக்கப்பட்டார்.

அவர் உடனே தி.மு.க.வில் சேர்வார், அ.ம.மு.க.வில் சேர்வார் எனவும் சசிகலா தலைமையேற்று அவருடன் சென்றதாகவும் சமூகவலைதளங்களில் பலவாறு கருத்துக்கள் பரவின.

இந்நிலையில், அவரின் ஆதரவாளர்கள் ‘1972லிருந்து கட்சி சந்தித்த பல இன்னல்களிலும் தன்நிலை மாறாமல் இருந்தவர். மீண்டும் அவரை கட்சியில் இணைக்கவேண்டும் என தலைமையை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்’ என போஸ்டர் அடித்து ஒட்டினர்.

ADMK ex Member Anwar Raja poster viral

தற்போது அதேபோல், எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சியிலிருந்து விலக்கியதால் தன்னுடைய ஆதங்கத்தை போஸ்டர் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், ‘தலைவா! கட்சியிலிருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை, ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன், அதில்.. நான் என்னை மறக்கின்றேன்..’ எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

admk
இதையும் படியுங்கள்
Subscribe