Advertisment

பதவி விலகிய எடப்பாடி...

 Edappadi resigned ..?

11 ஆண்டுகளாக வகித்து வந்த சேலம் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்துள்ளார்.

Advertisment

அண்மையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி விண்ணப்பித்திருந்தார். அதேநாளில்அதே பதவிக்குஅதிமுகபுள்ளியாக இருக்கக்கூடியஇளங்கோவனையும் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்ய வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சேலம் மாவட்ட புறநகர் அதிமுக செயலாளராக 11 ஆண்டுகளாக தான் வகித்த பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுத்துள்ளார். 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போதும், அதேபோல் 2017 க்குப் பிறகு முதல்வராக பொறுப்பேற்ற போதும், அதேபோல் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்ற போதிலும் மாவட்டச் செயலாளர் பதவியை மட்டும் விட்டுக் கொடுக்காமல் நீடித்து வந்த நிலையில், அப்பதவியில் இருந்து தற்போது விலகியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Advertisment

omalur Salem admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe