அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகிகள்

திமுக நிர்வாகிகள் சிலர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

திமுக எஸ்.சி., எஸ்.டி. பிரிவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஆறுமகப்பெருமாள் தலைமையில் திமுகவைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர் இசக்கிப் பாண்டி, துணை அமைப்பாளர் பால்ராஜ், சேரன்மாதேவி ஒன்றிய அமைப்பாளர் சக்திவேல், துணை அமைப்பாளர் முருகன் உட்பட 45 பேர் திமுகவில் இருந்து விலகி, வெள்ளிக்கிழமை முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியின்போது முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உடனிருந்தார்.

admk Edappadi Palanisamy Esakki Subbaiah
இதையும் படியுங்கள்
Subscribe