Advertisment

ஒரே சுவரில் உதயசூரியன், இரட்டை இலை சின்னங்கள்.. இது எப்படி இருக்கு..!

admk dmk

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டதுமே எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். இரு வேறு வேட்பாளரகள் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்வதும் இருவரும் தங்களுக்கு வாக்கு கேட்பதும், வெற்றிபெற வாழ்த்துகள் கூறிக்கொள்வது போன்ற ஆரோக்கியமான அரசியல் சந்திப்புகளும் நடக்கின்றன. சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை திமுக வேட்பாளர் டாக்டர் முத்துராஜாவும், மநீம வேட்பாளர் மூர்த்தியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது சால்வை அணிவித்துக்கொண்டனர்.

Advertisment

இது ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் வேட்பாளர்களின் சின்னங்களை சுவரில் வரைய தொண்டர்கள் போட்டிப் போட்டு சுவர்களைப் பிடித்து எழுதுவதும் வழக்கமானதுதான். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமைச்சர் விஜயபாஸ்கரும், திமுக கூட்டணியில் திமுக வேட்பாளராக தென்னலூர் பழனியப்பனும் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்காக தொகுதி முழுவதும் இரட்டை இலை, உதயசூரியன் சின்னங்கள் தனித் தனி சுவர்களில் வரையப்பட்டுள்ளன.

Advertisment

ஆனால் விராலிமலை தொகுதியில் பல இடங்களில் ஒரே சுவரில் இரு சின்னங்களும் வரையப்பட்டுள்ளதால் பலரும் ஆச்சர்யமாக பார்க்கின்றனர். என்னதான் இருந்தாலும் இந்த இரு கட்சிகளும் ஒரே இடத்தில் பிறந்ததுதானே என்கிறார்கள்.

Pudukottai viralimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe