Advertisment

உள்ளே தலைமை ஆலோசனை! வெளியே தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்! பரபரக்கும் அதிமுக மா.செ. கூட்டம்! 

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் இன்று (24/11/2021) காலை 11.00 மணிமுதல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் நகராட்சி, மாநகராட்சித் தேர்தல், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டமன்றத் தொகுதி, இலத்தூர் மேற்கு ஒன்றியச் செயலாளரை மாற்றக் கோரி, இலத்தூர் மேற்கு ஒன்றிய அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அங்குள்ளவர்கள் தெரிவிக்கையில், “மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் தொடர்ந்து மாவட்ட விஷயங்கள் பலவற்றில் தலையிட்டுவருகிறார். மேலும், அவருக்கு நெருக்கமானவர்களையே பொறுப்புகளில் நியமிக்கிறார். அவர்களை மாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவிவருகிறது.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe