ADMK CM candidate will announce by October 7

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்குழு கூட்டம் முடிந்து வெளியே வந்த கே.பி.முனுசாமி, “வரும் 7ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பார்கள்” என தெரிவித்தார்.