ADVERTISEMENT

அதிமுக வேட்பாளர்களுக்கு டெபாசிட் போகணும் ராமதாஸ் பேச்சால் அதிமுக அதிர்ச்சி !

05:57 PM Apr 12, 2019 | Anonymous (not verified)

அதிமுக கூட்டணியில் பாமக , பாஜக , தேமுதிக , புதக , தாமாக மற்றும் சில கட்சியினர் இடம்பெற்றுள்ளனர் . அந்தந்த கட்சி தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்களையும் , கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் திருப்போரூர் தொகுதியில் அதிமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிப்பில் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் இந்த தொகுதியில் மீனவ சமுதாய மக்கள் அதிகமாக வாழும் பகுதியாக உள்ளது .

ADVERTISEMENT



மீனவ சமுதாய மக்கள் எப்போதுமே அதிமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் வேற எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு, ஆகையால் தேர்தலில் சிறப்பாக பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக்கூறினார். பின்பு திமுகவுக்கு பதில் அதிமுக என்று கூறிவிட்டோம் என்று சுதாரித்துக்கொண்ட ராமதாஸ் திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்'' என ராமதாஸ் கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக வேட்பாளர்கள் என்பதற்குப் பதிலாக, அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக் கூறியதால் பொதுக்கூட்டத்தில் இருந்த கூட்டணிக் கட்சி தொண்டர்களும் , நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்தனர் . சமீப காலமாக அதிமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் இப்படி மாற்றி பேசுவது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை எரிச்சலடைய வைக்கிறது என்று தொண்டர்கள் கருதுகிறார்கள் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT