/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1769.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் 11-வது வார்டில் போட்டியிடும் பிரபாகரன், 12-வது வார்டில் அதிமுக சார்பில் பால்ராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல், முன்னாள் அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கணேசன் மனைவி முத்துலட்சுமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பு அமமுகவில் இணைந்தார். அவர் தற்போது, 9-வது வார்டு அமமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இவர் தனது மகன் கார்த்திக், மேலும் ஒட்டன்சத்திரம் அதிமுக நகர இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ராஜமுருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 12-வது வார்டில் போட்டியிடும் இஸ்மாயில் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்தநிகழ்வின் போது நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் மற்றும்கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)