R.P. Udhayakumar who was involved in the struggle.. ADMK candidate withdrawn!

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அதில், 9வது வார்டில் அதிமுக சார்பில் இந்திராணி என்பவரும் திமுக சார்பில் கிருஷ்ணவேணி, பால்பாண்டி என்ற இரண்டு பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் இந்திராணி என்ற அதிமுக பெண் வேட்பாளரை காணவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் வாடிப்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisment

அதிமுக சார்பில் 9வது வார்டில் போட்டியிடும்இந்திராணி என்ற பெண் வேட்பாளர் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திராணி, “என்னை யாரும் கடத்தவில்லை. எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை. மேலும் என்னால் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது. எனவே சொந்த சுய விருப்பத்தின் பேரிலேயே நான் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டேன். என்னை யாரும் கடத்தவில்லை மிரட்டவும் இல்லை” எனத் தெரிவித்தார்.

Advertisment