தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ (படங்கள்)

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், வட சென்னை மக்களவைத் தொகுதியில், அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். அதன் அடிப்படையில், இன்று (16-04-24) வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது, ராயபுரம் மனோ வந்த வண்டியின்பின்னால், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் வேடமணிந்தஒருவர், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு முன்னால், தாரை தப்பட்டையுடன் ஆண்களும், பெண்களும் ஆடிக்கொண்டேவந்தனர்.

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

election campaign Lok Sabha election north chennai pictures
இதையும் படியுங்கள்
Subscribe