Advertisment

துணி துவைத்துக் கொடுத்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

Advertisment

வாக்குச் சேகரிக்கவும், பொதுமக்களைக் கவரவும் வேட்பாளர்கள் பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில், நாகை அ.தி.மு.க. வேட்பாளர் வாக்காளர்களின் துணிகளைத் துவைத்து வாக்குசேகரித்தது பலரையும் திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது.

நாகை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க., வி.சி.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளரான தங்க கதிரவன் இன்று (22/03/2021) நாகூர் வண்டிபேட்டை பகுதியில் பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பெண்மணி ஒருவர் துணி துவைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்த வேட்பாளர், அவரிடம் சென்று அந்தப் பெண்ணை கொஞ்சம் ஒதுங்கி நின்னுங்க அம்மா, மேல தண்ணி பட்டுடப்போகுது எனக் கூறிவிட்டு அதில் ஒரு துணியை எடுத்து,'கும்மனும்கும்மனும் நல்லா கும்மனும்'னுபாட்டுப்பாடாத குறையாக கும்மி துணியைத் துவைத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பெண்மணியிடம் துணியை வாங்கித் துவைத்து, சோப்பு போட்டு பிழிந்துகொடுத்தது காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Nagai district election campaign admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe