Advertisment

புதுமுக அதிமுக வேட்பாளர்.. திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ.. கடும் போட்டியில் திண்டிவனம் (தனி) தொகுதி..!

ADMK candidate Archunan DMK sitting MLA Seethapathy.. Tindivanam constituency  contest ..!

Advertisment

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பரபரப்பான தொகுதிகளில் திண்டிவனம் முதன்மையானது. சென்னையிலிருந்து தெற்கு நோக்கி திரும்புகிறவர்கள் அனைவரும் இந்த ஊரைக் கடந்துதான் செல்ல வேண்டும். 24 மணி நேரமும் தூங்காநகரமாக பரபரப்பாக இயங்கும் நகரம் திண்டிவனம். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ. சீத்தாபதி சொக்கலிங்கம் மீண்டும் தலைமை மூலம் களம் இறக்கப்பட்டுள்ளார்.

இவர் தொகுதிக்குப் பெரிய அளவில் திட்டங்களைக் கொண்டு வரவில்லை என்ற குறை மக்களிடம் உண்டு. அரசு அறிவித்த திட்டங்களைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரவில்லை என்ற குறை இருந்தாலும், தொகுதி மக்களோடும் கட்சியினரோடும் எப்போதும் பாசத்தோடு உபசரிப்பவர் இவர். தொகுதிக்கு நல்லதை செய்யவில்லை என்றாலும், இவர் கெடுதலையும் செய்யவில்லை அதனால் அவரே மீண்டும் தொடரலாம் என்ற எண்ணமும் தொகுதி மக்களிடம் உள்ளது.

ADMK candidate Archunan DMK sitting MLA Seethapathy.. Tindivanam constituency  contest ..!

Advertisment

மரக்காணம் பகுதியில் உள்ள அதிமுகவினர் பலரை திமுகவில் இணைத்துள்ளார். இதன் மூலம் இவரது பலம் கூடியுள்ளதாக கூறுகின்றனர் உடன் பிறப்புகள். அதே நேரத்தில் அதிமுக வேட்பாளராக அர்ச்சுனன் என்பவரை கட்சித் தலைமையின் ஆதரவோடு சி.வி. சண்முகம் களமிறக்கியுள்ளார். புதுமுகமான அர்ச்சுனன், ‘பழைய முகமான சீத்தாபதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்’ என்று மக்களை நாடிச் சென்று வாக்கு கேட்டு வருகிறார். தொகுதி வாக்காளர்கள் கவனம் அர்ச்சுனன் பக்கமும் திரும்பியுள்ளது. இருவருக்குமிடையே பலத்த போட்டி உள்ளது.

இருந்தும் தற்போதைக்கு ஓட்டு வேட்டையில் அர்ச்சுனன் முந்திச் சென்றுகொண்டிருக்கிறார். அவரை முந்திச் சென்று வெற்றிக்கனியைப் பறிக்க வேண்டுமானால், சீத்தாபதி கூட்டணிக் கட்சியினர் ஆதரவோடு இன்னும் கடுமையாக ஓடி உழைக்க வேண்டிய நிலையில் உள்ளார். இவர்களோடு தினகரன் கட்சி கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக சந்திரலேகாவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக பேச்சிமுத்துவும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் தலித் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அன்பில் பொய்யாமொழியும் போட்டியில் உள்ளனர்.

ADMK candidate Archunan DMK sitting MLA Seethapathy.. Tindivanam constituency  contest ..!

இதில் தேமுதிக வேட்பாளர் சந்திரலேகா கணிசமான அளவில் வாக்குகளைப் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு. இருந்தும் அவர் பெறும்வாக்கு பிரதான வெற்றி வேட்பாளரை எந்தவிதத்திலும் பாதிக்காது என்கிறார்கள் தொகுதியில் கள நிலவரம் அறிந்தவர்கள். அதிமுக அர்ச்சுனன், திமுக சீத்தாபதி இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

tn assembly election 2021 thindivanam admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe