நெல்லை புறநகர் மாவாட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆக இருக்கும் ரெட்டியார்பட்டியை சேர்ந்த நாராயணன் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கபட்டுள்ளார்.

admk candidate announced

Advertisment

Advertisment

இவர் ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம் செய்து வருபவர். நாங்குநேரியில் யூனியன் கவுன்சிலர் ஆக இருந்துள்ளார். மேலும் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவர் யூனியன் சேர்மன் பதவிக்கு போட்டியிட்டவர். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமணன் இருவரும் தேர்தலில் சமமான வாக்குகளை பெற்றனர். சமமான வாக்குகளை பெற்றதால் குலுக்கல் முறையில் சேர்மன்தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி குலுக்கல் முறையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமணன் வெற்றி பெற்றார் என அறிவிக்கபட்டது. நாராயணன் நூலியில் இந்த பதவியை தவறவிட்டவர் என குறிப்பிடத்தக்கது.