Advertisment

“சாமியார் சொன்னதால் ராஜபாளையத்தில் போட்டியிடுகிறேன்!” - ராஜேந்திரபாலாஜி பிரச்சாரத்தில் ஆன்மிக நெடி!

admk candidate and minister election campaign

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வாக்கு சேகரிக்கும்போது, வார்த்தைக்கு வார்த்தை ‘கோவில்.. ஆன்மிகம்.. சாமியார்..’ என்று பேசி வருகிறார்.

Advertisment

“மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போல், பல்வேறு கட்டமைப்புகளுடன், இந்த ராஜபாளையம் நகரம் அமைந்திருக்கிறது. நான் திருவண்ணாமலையில் ஒரு சாமியாரைச் சந்தித்த போது அவர், ‘நீங்கள் ரா என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் தொகுதியில் நில்லுங்கள்..’ என்று கூறி எனக்கு ஆசி வழங்கினார். நான் முயற்சி எடுத்தேன். இறைவன் முடிவெடுத்தான். ராஜபாளையம்.. ராஜேந்திரபாலாஜி.. இயற்கையாகவே ஒற்றுமையாக உள்ளது. ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே ‘பக்தி இருக்கும்; கடவுள் இருக்கிறார்’ என நம்புபவன் நான். ஆன்மிக நம்பிக்கையாளர்கள் பாவம் செய்ய மாட்டார்கள். கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் பாவம் செய்யத் தயங்கமாட்டார்கள். ராஜபாளையம் நகரம் ஒரு அற்புதமான நகரம். எனக்குப் பிடித்த ஆன்மிக நகரம்.” என்றெல்லாம் பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.

Advertisment

admk election campaign minister rajendra balaji Rajapalayam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe