Advertisment

“கலைஞர் துவங்காத தமிழ் பல்கலைக்கழகத்தை மலையாளியான எம்.ஜி.ஆர். துவங்கினார்..” வைத்திலிங்கம் அதிரடி

ADMK Booth committee meeting at trichy

Advertisment

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி மற்றும் மகளிர் குழு அமைத்தல் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி மன்னார்புரம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமை ஏற்று நடத்தினார். தலைமை ஏற்று பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “தற்போது வந்திருக்கும் நடிகர்களெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை போல நல்லாட்சி நடக்கும் என்றுதான் கூறுகிறார்கள். புதிய கட்சியைத் தொடங்கும் நடிகர்களும் மற்றவர்களும் அறிஞர் அண்ணாவையும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியை குறித்துதான் சிந்தித்துப் பேசுகிறார்கள். அவர்களுடைய ஆட்சி நல்லாட்சி என்றும் கூறுகிறார்கள். ஆனால், அப்படி கலைஞரை எந்த ஒரு நடிகர்களும் குறிப்பிட்டு பேசுவதில்லை.” என்றார்.

அவரை தொடர்ந்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “தி.மு.க. தலைவர் கலைஞர் ஆரம்பிக்காத தமிழ்ப் பல்கலைக் கழகத்தை அன்று மலையாளியான எங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தான் முதல் முதலில் துவங்கினார்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அதனால் 350 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

Advertisment

ADMK Booth committee meeting at trichy

வேளாண் மண்டலம் விவசாயிகளுக்கு வேண்டிய நன்மைகளை செய்துள்ளது.இப்படி எத்தனையோ திட்டங்களை இந்த ஆட்சியிலே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இன்றைக்கு, தி.மு.க. மத்திய அமைச்சராக இருந்த ராஜா, ஜெயலலிதாவைப் பற்றி மிக இழிவாகப் பேசுகிறார். ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க.வில் யாருக்கும் தகுதி இல்லை, யோக்கியதை இல்லை.

கலைஞரிடம் ஜெயலலிதாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று நிருபர்கள் கேட்டபோது, கலைஞர், “ஒரு தைரியம் மிக்க பெண்மணி” என்று கூறினார். அவரிடம் பிடித்ததே அவருடைய தைரியம் என்று சொன்னவர் கலைஞர். அதையே ராஜாவுக்கு சொல்கிறேன், 2ஜி வழக்கில் முதலில் துவக்கத்திலிருந்து இன்றுவரை அப்பில் செய்யப்பட்டு வருகிறது. அதில் இருந்து விடுதலையாகி பின் பேசலாம். ஊழலைப் பற்றி பேசுவதற்கு தி.மு.க.விற்கு எந்த தகுதியும் இல்லை. ஏனென்றால் சர்க்காரியா கமிஷனில் விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தவர்கள் என்று சர்க்காரியா சொல்லியிருக்கின்றார்.

ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் வைத்து வாபஸ் வாங்கிக்கொண்டு சென்றார். ஆனால் ஜெயலலிதா, நான் தவறு செய்யவில்லை நீதிமன்றம் செல்கிறேன் என்றார். ஆனால், நீதிபதி தீர்ப்பு வழங்கினார். ஒருவர் மறைந்துவிட்டால் நீதிமன்ற தீர்ப்பு அவரை பாதிக்காது. அவரைப் பற்றி குறை சொல்லக் கூடாது. அந்த அரசியல் நாகரீகம் கூட தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார்.

இந்த இயக்கம் எந்த நிலையிலும் எப்பொழுதும் தனித்துவமிக்க இயக்கம். இன்றைக்கு இந்த இயக்கம் புரட்சித்தலைவி ஜெயலலிதா சொன்னதுபோல், அவர் மறைவுக்குப் பிறகும் நூறு ஆண்டுகாலம் இருக்கும்.

100 ஆண்டுகாலம் ஆட்சி செய்யும். அதற்கு நாம் செயல் வடிவம் கொடுக்க வேண்டும். நமது பூத் கமிட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் 25 பேர்களாக இருக்க வேண்டும். அடுத்த வாரம் முதல், ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூத்க்களில் இருந்து கிடைக்கின்ற இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை படிவங்களை சரி பார்ப்போம். அதேபோல் மகளிர் குழுவையும் பார்ப்போம். பூத் கமிட்டியில் இருக்கும் இளைஞர்கள் குடிநீர் பற்றாக்குறை இருக்கும் இடங்களுக்கு லாரிகளில் குடிநீர் கொண்டு சென்று வழங்கவேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள், இரண்டு இடத்தில் வாக்காளர் பெயர் இருப்பவர்கள் இவற்றையெல்லாம் கணக்கெடுத்து இப்பொழுது நீக்கியும் சேர்த்தும் இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் சரி பார்க்க வேண்டுமெனில் மார்ச் 1ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் 2 மாதம் 10 நாட்கள்தான் இருக்கிறது. அதற்குள் இதைச் செய்து முடிக்க வேண்டியது ஒவ்வொரு கட்சிக்காரருடைய கடமை.

ஏனென்றால், நாம் இலக்கை அடைய வேண்டும் என்றால், முதலில் இந்த இரண்டு மாதம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரே நோக்கில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். எதையும் சிந்தித்து, ஆரவாரமில்லாமல் செய்ய வேண்டும். இந்த சக்தி மிகவும் மகத்தானது, அந்த சக்தியை கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் வீணாக்காமல் செயல்வடிவம் கொடுத்து அ.தி.மு.க. வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும். அதுதான் புரட்சித்தலைவருக்கும் புரட்சித்தலைவிக்கும் நாம் செய்கின்ற நன்றிக்கடன். முதல் தடவை இளைஞர் இளம்பெண்கள் பாசறை பெண்களுக்கு கமிட்டியை அமைத்து இந்த அ.தி.மு.க. வெற்றி பெற நீங்கள் பாடுபட வேண்டும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

vaithilingam admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe