Advertisment

தமிழிசைக்கு தடை போட்ட அதிமுக தலைமை! பாஜக அதிர்ச்சி!

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை தொடர்ந்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.நாம் தமிழர் கட்சி சார்பாக தீப லட்சுமியும் போட்டியிடுகிறார்.

Advertisment

வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக தலைவர்கள் வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. இதனால் அதிமுக, பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் இதுதொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த தமிழிசை, பாஜக கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்த கட்சியில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போதைக்கு அதுதான் முக்கியமான பணி என்பதால், கூட்டணிக் கட்சியான அதிமுக வேட்பாளரை ஆதரித்து வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்யவில்லை. பிற காரணங்கள் இல்லை. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

Advertisment

admk

இது பற்றி அரசியல் விமர்சனகர்களிடம் விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவிற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவு கொடுத்ததும், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளிக்காமல் வெளிநடப்பு செய்து முத்தலாக் மசோதா நிறைவேற காரணமாக அதிமுக செயல்பட்டது வேலூரில் இருக்கும் முஸ்லீம் மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறுகின்றனர். இதோடு பாஜக தலைவர்களை அழைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினால் அது இன்னும் பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்கு கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக பாஜகவிற்கு அதிமுக தலைமை வேலூர் பிரச்சாரத்தில் தடை போட்டதாக கூறுகின்றனர்.

loksabha elections Vellore admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe