ADMK appoints new district secretaries

அதிமுக சார்பில் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கன்னியாகுமரி கிழக்கு அதிமுக மாவட்டச் செயலாளராக தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி அதிமுக மாநகரச் செயலாளராக சீனிவாசனும், பெரம்பலூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இளம்பை தமிழ்ச்செல்வனும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கும்பகோணம் அதிமுக மாநகரச் செயலாளராக ராமநாதனும், தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக சரவணனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இதன்படி 5 பேருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும்முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள் சென்றதால், ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.