பாஜக நடந்துமுடிந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக மோடி பதவியேற்றார். மத்திய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது.

admk pmk

Advertisment

இந்த அமைச்சரவையில் அதிமுகவினர் யாராவது இடம் பெறுவார்களா அல்லது பாஜகவை சேர்ந்த தமிழக தலைவர்கள் யாராவது இடம்பெறுவார்களா என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் பாஜக இடம் தரவில்லை. இதனைத்தொடர்ந்து துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியிலேயே தங்கி இருந்தார். இருந்தும் அவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில், ஒருபக்கம் ஓ. பன்னீர்செல்வம் தனது மகனும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சரவையில் இடம்பெற வைக்க முயற்சிக்கிறார். மறுபக்கம், எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த உறுப்பினரான வைத்திலிங்கத்திற்கு சீட் கேட்டு வருகிறார். வைத்திலிங்கம் வரவில்லையென்றாலும், ரவீந்திரநாத் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். இப்படியாக உட்கட்சி பூசல் நீடிக்கும்போது, பாமகவும் தன் பங்கிற்கு மத்திய அமைச்சரவையில் இடம்பெற முயற்சிக்கிறது.

Advertisment

இந்த தேர்தலில் பாமகவின் தோல்வி மிகமோசமானது என்று நினைத்த பாமக தலைமை. மத்திய அமைச்சர் பதவியை பெறுவதன் மூலம்தான் அந்த தோல்வியை சரிகட்ட முடியும் எனவும் நினைக்கிறது. இப்படியான காரணங்களால் அது மிகவும் முயற்சி செய்கிறது. இதற்காக அவர்கள் பாஜக தலைமை வரை பேசி வருகின்றனர். இப்படியாக மத்திய அமைச்சரவைக்கு மூன்றுபேர் போட்டியிடுகின்றனர்.