தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் 3 உறுப்பினர்களும், அதிமுக சார்பில் 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் என்.சந்திரகேகரன் போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒருஇடம் ஒதுக்கப்பட, இரண்டு சீட்கள் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

pmk

பாமக சார்பில் முன்னாள் மத்திய சுகதரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என வெளியாகியுள்ளது. இதனையடுத்து, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கலின் கால அவகாசம் வரும் திங்கட்கிழமை முடியும் நிலையில் கடைசி நாளான திங்கட்கிழமை, அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்மனுதாக்கல் செய்ய உள்ளனர்.