சமீப காலமாக தினகரனுக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மோதல் ஏற்பட்டது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்க தமிழ்ச்செல்வன் தினகரனை ஆபாசமாக பேசுவது போல் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த விவகாரம் பற்றி தினகரன் செய்தியாளர்களை சந்தித்த போது, தங்க தமிழ்ச்செல்வனை அமமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விரைவில் நீக்கப்படுவார் என்று கூறினார். இது பற்றி வெற்றிவேல் பேசும் போது, தங்க தமிழ்ச்செல்வனை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என்று கூறினார்.

Advertisment

ammk

பின்பு இது பற்றி விமான நிலையத்தில் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் என்னை யாரும் இயக்கவில்லை என்றும், அதே மாதிரி நான் எந்த கட்சியிலும் தற்போது சேரப்போவதில்லை என்றும் கூறினார். தினகரன், தங்க தமிழ்செல்வனின் மோதல் பின்னணி பற்றி விசாரித்த போது, தங்க தமிழ்செல்வனை பயன்படுத்தி ஓ.பன்னீர்செல்வத்தையும், தினகரனையும் ஒரே நேரத்தில் முடக்க பாஜகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக பாஜக தலைமை சொல்லும் திட்ட படி தங்க தமிழ்ச்செல்வன் இயங்குகிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.