Admission to CV Shanmugam Private Hospital

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் நேற்று தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய சிகிச்சை தொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மருத்துவர்கள் அவரது உடல்நிலையைத்தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவருக்குத்தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சி.வி.சண்முகத்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment

நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகவில்லை.வழக்கமான ரெகுலர் செக்கப்பிற்காக மட்டுமே ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார் என சி.வி.சண்முகம் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.