நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டவர் நடிகை சுமலதா.இவர் கன்னட நடிகர் அம்பரீஷின் மனைவி ஆவார்.தமிழில் ரஜினி கூட முரட்டுக்காளை,கழுகு ஆகிய படங்களில் நடித்தவர்.நடிகை சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த போது,தனக்கு ஆதரவு அளித்த பாஜகவுக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisment

actress sumalatha

பின்பு அரசியலில் ரஜினி,கமல் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு ரஜினி எனது குடும்ப நண்பர் எனக்கு நன்றாக தெரியும் என்றும், அவர் தமிழக அரசியலை நன்கு புரிந்து வைத்துள்ளார்,அதோடு அரசியல் பற்றிய தெளிவான சிந்தனை ரஜினியிடம் உள்ளது என்றும் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டால் கண்டிப்பாக சாதிப்பார் என்றும் குறிப்பிட்டு பேசினார்.மேலும் கமலும் அரசியலில் சாதிப்பார் என்றும் கூறியுள்ளார்.