விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

vck

இதனையடுத்து நடிகையும், நட இயக்குனரனும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார். மேலும் பல சர்ச்சை கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

Advertisment

actress

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், இந்த பிரச்சனையில் தனக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவு தருவார் என தான் நம்புவதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நபர்களை அடக்குவதற்கு சரியான நபர் ராம்தாஸ் தான் என்றும், அவர் எனக்கு ஆதரவு அளிப்பதோடு விசிகவுக்கு கண்டனம் தெரிவிப்பார் என்றும், என்னை போன்ற பெண்களுக்கும் இந்துக்களுக்கும் ஆதரவாக அவர் குரல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அரசியலில் விடுதலை சிறுத்தை கட்சிகள் மற்றும் ராமதாஸின் பாமக கட்சியினர் இடையே பிரச்னை ஏற்படும் வண்ணம் நடிகை காயத்ரி ரகுராம் மீண்டும் சர்ச்சை பதிவை போட்டது அரசியல் கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.