Skip to main content

நடிகை ரோஜாவின் அதிரடி ஆக்‌ஷன்! சிறையில் இருந்து மீட்கப்பட்ட ஓட்டுநர் -ஆக்‌ஷன் ரிப்போர்ட்

Published on 21/03/2020 | Edited on 21/03/2020

 

கோவையைச் சேர்ந்த லாரி டிரைவரான ரவிச்சந்திரன் என்பவரைத் தேடிவந்த ஆந்திர போலீஸ், அரிசி கடத்திய வழக்கு என்று சொல்லி, அவரை அள்ளிக் கொண்டுபோனது. வழக்கில் தொடர்பில்லாத அவரை அங்கே கொண்டு போய் கடுமையாகச் சித்திரவதை செய்ததோடு, அங்குள்ள சிறையிலும் அடைத்துவிட்டது. 
தான் நிரபராதி என்று அவர் கதறிய கதறல் அங்கு எடுபடவில்லை. தகவல் அறிந்து பதறிப் போன ரவிச்சந்திரனின் மனைவி வாணீஸ்வரி, ஆந்திராவுக்கே போய் போராடியும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

 

Sathyaraj



இதனால் நிலைகுலைந்து போனது ரவிச்சந்திரனின் குடும்பம். இந்த நிலையில் இந்தத் தகவல் எழுத்தாளர் பாமரன் கவனத்துக்கு வர, அவர் உடனே நடிகர் சத்தியராஜைத் தொடர்பு கொண்டு விவரித்து, ”அண்ணே, இது ஆந்திர விவகாரம். அதனால், அங்கு எம்.எல்.ஏ.வாக இருக்கும் நடிகை ரோஜாவைத் தொடர்பு கொண்டு உதவுங்கள்” என்றார். 
 

சத்தியராஜா, ”பாதிக்கப்பட்டவர் நிரபராதிதானா? என்பதை முதலில்  உறுதிசெய்யுங்கள்” என்றார். உடனே அவினாசியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜெரால்ட் மூலம் விசாரித்துவிட்டு, பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் குற்றமற்றவர் என்றார் சத்யராஜிடம். அவர் உடனடியாக, ரோஜாவின் கணவரான இயக்குநர் செல்வமணியின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோனார்.


செல்வமணியோ, டிரைவர் ரவிச்சந்திரனின் மனைவியைத் தொடர்பு கொண்டு, முழு விபரத்தையும் தெரிந்துகொண்டு மனம் கலங்கினார். உடனடியாக செல்வமணி, ஆந்திராவில் இருந்த தன் மனைவி ரோஜாவைத் தொடர்புகொண்டு விபரம் முழுதையும் சொல்ல,  சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவினது அதிரடி ஆக்‌ஷனின் பேரில், இரண்டுமாத ஆந்திர வதையில் இருந்து ஜாமீனில் விடுபட்டு, இரண்டு நாட்களுக்கு முன்  கோவைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இப்போது ரவிச்சந்திரனின் குடும்பமே நடிகை ரோஜா தம்பதியரையும், நடிகர் சத்தியராஜையும் பாமரனையும் நெகிழ்வோடு வாழ்த்திக்கொண்டிருக்கிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Notice that Vikravandi constituency is vacant

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் உடனடியாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (06.04.2024) புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (06.04.2024) விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். இதனையடுத்து புகழேந்தியின் உடல் நேற்று (07.04.2024) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அதாவது போலீசார் வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டு அரசு மரியாதை அளித்தனர். இதனையடுத்து சொந்த ஊரான அத்தியூர் திருவாதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையில் புகழேந்தி உடல் தகனம் செய்யப்பட்டது. 

Notice that Vikravandi constituency is vacant

இந்நிலையில், புகழேந்தி காலமானதை அடுத்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக சட்டப் பேரவை செயலகம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இடைத்தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே தேதியில் (19.04.2024) இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.