நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

அதன்படி, இன்று (03-04-24) காலை 11 மணியளவில், திருவொற்றியூர் பெரியார் நகரில், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக நடிகை நமீதா வேனில் நின்றபடி சாலைக்கு நடுவில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் காரணமாக, இருசக்கர வாகனங்கள், மற்றும் கனரக வாகனங்கள்ஊர்ந்தபடியேசென்றது.

Advertisment