/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/actress kushboo 600.jpg)
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நாட்டில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் கற்பழிப்பு சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. கற்பழிப்பு சம்பவங்கள் குறித்து பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக் கும் கொடுமைகளை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது.
நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசாமல் இருப்பது ஏன்? காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். உண்மையில் பெண்கள் இல்லாத நாட்டை பா.ஜனதாவினர் உருவாக்க நினைக்கிறார்கள்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களில் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்களே அதிக அளவில் ஈடுபடுகிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந்ததைவிட தற்போதைய பா.ஜனதா ஆட்சியில், கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி சம்பவங்கள் அதிகரித்து விட்டது. இவ்வாறு கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)