Advertisment

நடிகை கீர்த்திசுரேஷ் பாஜகவில் இணைகிறாரா? தாயார் மேனகா மோடியுடன் பேச்சுவார்த்தையா?

பாலிவுட்டிலும் தன் கொடியை பறக்கவிட சென்றிருக்கும் நடிகைகீர்த்திசுரேஷ் பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் பாஜகவில் இணையப்போவதாக பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அவரது தாயார் மேனகா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

k

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

’’என் கணவர் சுரேஷ் பாஜகவில் இருக்கிறார். அந்த முறையில் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய டெல்லி சென்று இருந்தேன். பிரச்சாரம் முடிந்த உடன் சினிமா பிரபலங்கள் சிலர் பிரதமர் மோடியை சந்தித்தார்கள்.

Advertisment

சுரேஷ் கோபி, கவிதா என்று எனக்கு அறிமுகமான சிலர் பாஜக அலுவலகத்தில் மோடியை சந்தித்தார்கள். அப்போது நானும் அவர்களுடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டோன். அந்த போட்டோ வெளியானதால் நடிகை மேனகா பாஜகவில் சேர்ந்துவிட்டார் என்று செய்தி பரவியது.

k

இதன் அடுத்தகட்டமாக, என் மகள் கீர்த்தியும் பாஜகவில் இணையப்போவதாகவும், இதற்காகத்தான் நான் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினேன் என்றும் பேசுகிறார்கள். மற்றபடி, எங்கள் குடும்பம் பாஜக குடும்பம் தான். என் கணவர் பாஜகவில் இருக்கிறார். நானும் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தேன். ஆனால், நானோ, என் மகளோ பாஜகவில் சேரவில்லை’’ என்று கூறியுள்ளார்.

actress kerthi sruesh salem modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe