பிறந்த நாளுக்கு வாழ்த்தலாம் என்று எழுத முனைகையில் மரணச்செய்தி... திமுக எம்.எல்.ஏ அன்பழகன் மரணம் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்!

actress

கடந்த 2- ஆம் தேதியன்று மூச்சுத் திணறலுடன் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கரோனா பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அன்பழகன் உடல் கண்ணம்மாப்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ இறந்தது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி கூறியுள்ளார். அதில், "அன்பழகன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவர் பூரண குணம் பெற்று வரவேண்டும் என்று எழுத முனைகையில் அன்னாரின் மரணச் செய்தி வருகிறது. One more corona victim. மிகவும் கலகலப்பாக அன்பாக பழகுவார். தி.மு.க.வுக்கு பெரிய இழப்பு. அன்னாரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தி.மு.க.வினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மேலும் டி.ஆர்.பாலு, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

Actress kasthuri MLA twitter
இதையும் படியுங்கள்
Subscribe