actress

Advertisment

தமிழகத்தில் இருக்கும் பல மாவட்டங்கள் மற்றும் ஊர்களின் பெயர் தமிழ் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் அதன் பெயர்களைக் குறிப்பிடும் போது சரியான தமிழ் உச்சரிப்பிற்கு நேர்மாறாக உள்ளது. இதனையடுத்து தமிழில் அதன் ஊர்ப் பெயர்களை உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் அதன் பெயர்கள் மாற்றப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஊர்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களைஇரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பெயர்ப் பலகைகளிலும் மாற்றப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஊர்கள் பெயர் தமிழில் எழுதுவது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், நான்லாம் இன்னும் மெட்ராஸ், ஊட்டி, பம்பாய்னு தான்சொல்லிக்கிட்டுருக்கேன்... இதுல palavakkam இல்லை, paalavaakkam, coimbatore மாத்தி koyampuththur ஆனா erode மட்டும் erode... இப்படிக் குழப்பி என்ன லாபம்? டெர்மினஸ், டிரெயின் ஸ்டேஷன் எல்லாத்துலயும் பேர் மாத்த காண்ட்ராக்ட்- எடுக்கறவங்களுக்கும் குடுக்கறவங்களுக்கும் லாபம் என்றும், ஒரு வேளை, நியூமராலஜியா இருக்குமோ? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.