Advertisment

நீங்கள் சொல்வது உண்மையா? இது சாத்தியமா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம்... பாஜகவினருக்கு நடிகை கஸ்தூரி அதிரடி பதில்!

actress

Advertisment

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வரும் 17- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனினும், நோய்த்தொற்று குறைவாக உள்ளதால் பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கு உத்தரவுக்குச் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 06.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் சமூக வலைதளப் பக்கத்தில் பாஜகவினர் எழுப்பிய ஒரு கேள்விக்கு நடிகை கஸ்தூரி பதில் அளித்துள்ளார். அதாவது, கோவிலை திறக்கவில்லை. கோவில் அலுவலகங்களை திறந்துள்ளார்கள். உண்டியல் வசூல் கணக்கு வழக்கு பார்த்து அதில் கை வைக்கும் திட்டமாக கூட இருக்கலாம். கோயில் பணத்தை பொதுவில் வைக்கும் அரசு ஹஜ் மானியத்தையோ சர்ச் சொத்தையோ அரசு ஊழியர்களின் சம்பளத்திலோ பங்கு கேட்குமா? என்றகேள்விக்கு நடிகை கஸ்தூரி அளித்த பதிலில், நீங்கள் சொல்வது உண்மையாக இருப்பின் யாரும் எந்த மத அமைப்பும் தங்கள் சொத்தை தர தயங்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். இது சாத்தியமா என்று தெரிந்தவர்கள் சொல்லலாம். அரசு ஊழியர்கள் சம்பளத்தை விடுங்கள், அகவிலை உயர்வை அரசால் மறுக்க முடியுமா? என்று பதிலளித்துள்ளார்.

Speech politics kasthuri Actress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe