Advertisment

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை விமர்சித்து நடிகை காயத்ரி ரகுராம் ட்வீட்... கோபத்தில் வி.சி.கட்சியினர்!  

வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரௌபதி’. இதில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இதனையடுத்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திரௌபதி படம் குறித்து பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம் திரௌபதி என்று கூறியிருந்தார். இந்த நிலையில், சேலம் மாவட்டம் , ஓமலூர் பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் , திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்துகொண்டதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. திரெளபதி திரைபடத்தை தடை செய்யக்கோரி விசிகவினர் நடத்திய போராட்டம் குறித்து நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்தவருமான நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் "குற்ற உணர்வு" (Guilty)என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Speech gayathriraguram politics vck draupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe