Advertisment

பாஜகவின் எச்.ராஜாவை பைத்தியம் என்று விமர்சித்த நடிகை குஷ்பு... குஷ்புவிற்கு காயத்ரி ரகுராம் கூறிய சர்ச்சை பதில்!

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்து இருந்தார்.

Advertisment

actress

Advertisment

இந்த நிலையில் எச்.ராஜாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். அதில், எச்சு’ ராஜா ஒரு பைத்தியக்காரர். எந்த விவேகமுள்ள நபரும் அவர் பேசும் விதத்தில் பேச முடியாது. தயவுசெய்து பாஜகவில் இருந்து யாராவது அவரை ஒரு புகலிடம் கொண்டு செல்ல முடியுமா ?? என்று பதிவிட்டுருந்தார். இதனையடுத்து குஷ்புவின் இந்த கருத்துக்கு நடிகையும், பாஜகவின் ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'கூ' என குறிப்பிட்டு நீங்கள் மற்றவர்களின் பெயரைதான் அப்படி அழைக்க முடியும்.பொய்களை தவிர உங்கள் வாழ்க்கையில் வேறு எதையாவது நீங்கள் பேசியிருக்கிறீர்களா? நீங்கள் சொன்ன பொய்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. நீங்கள் இந்துக்களை வெறுக்கிறீர்கள் என்று கடுமையாக நடிகை குஷ்புவை விமர்சித்துள்ளார்.

congress gayathriraguram h.raja kushboo politics
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe