டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியிலுள்ள பிரதமரின் இல்லத்தின் வெளியேவுள்ள எஸ்.பி.ஜி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 9 தீயணைப்பு வாகனங்களுடன் பிரதமரின் இல்லத்தின் எஸ்.பி.ஜி வளாகத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் அலுவலகம், சிறப்பு பாதுகாப்புக் குழுவின் (எஸ்பிஜி) கட்டடத்தின் வளாகத்தில் மின்கசிவால் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக தீ அணைக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisment

kushboo

இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் நடந்த தீ விபத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் பலர் பிரதமர் மோடியிடம் நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகையும், காங்கிரஸ் பிரமுகருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி அவர்களின் இல்லத்தில் நடந்த தீ விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளர். அதில், பிரதமர் மோடி அவர்களின் இல்லத்தில் நடந்த தீ விபத்து குறித்து கேள்விப்பட்டதாகவும், அவர் நலமாக இருப்பதாக நம்புகிறேன் என்றும், கவனமாக இருங்கள் பிரதமர் அவர்களே! என்றும் குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலர் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.