ADVERTISEMENT

பணத்திற்காக நாத்திகர் போல் காட்டிக்கொண்டு... டிவி விவாதம் குறித்த சம்பவத்தை விமர்சித்த காயத்ரி ரகுராம்!  

12:27 PM Jun 04, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கரூர் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வைச் சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார். கரு.நாகராஜன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். தமிழக காங்கிரஸ் கட்சி இதுகுறித்து தன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு கரு.நாகராஜனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. அதே போல் நேற்று தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் இந்து தமிழர் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமாருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுந்தரவள்ளிக்கும் இடையே விவாத நிகழ்ச்சியின் போது காரசார விவாதம் நடைபெற்றது.


இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அநாகரிகமான நபருக்காக என் வார்த்தைகளையும் நேரத்தையும் வீணாக்க நான் விரும்பவில்லை, மாற்றத்திற்காக சில பெண்களைப் பிரசங்கிக்கும் ஒரு அநாகரிகமான பெண். இருக்கிற ஒரு வாழ்க்கையில் உண்மையானதாக இருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாவிட்டால், அதற்காகத் தனிப்பட்ட தாக்குதல் நடத்தியும், மக்களை மாற்றும் முயற்சியிலும் ஈடுபடாதீர்கள். உங்களுக்கு நான் பதில் தருகிறேன் என்றும், அரசியல் லாபத்திற்காக கட்சிகள் மாற்றியும், மதத்தையும் மாற்றிவிட்டு பணத்திற்காக தன்னை ஒரு நாத்திகர் போல் காட்டிக்கொண்டும் இருந்தால் மக்கள் உங்களை மனநோயாளிகள் போல் நினைப்பார்கள் என்றும், அவர்களைப் போல் மாறுபவர்கள் நங்கள் இல்லை, எங்களுக்கு என்று ஒரு தர்மம், உண்மை தன்மையும் உள்ளது. அதை யாருக்காகவும், எதற்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT