Advertisment

பாஜகவில் இணைகிறாரா நடிகர் விஷால்...? விளக்கமளித்த மேலாளர்...!

Is actor vishal joining in BJP

2021-ம் ஆண்டுக்கான தேர்தலுக்காக பல்வேறு அரசியல் நகர்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுவருகிறது. அதில் குறிப்பாக பாஜக பல திட்டங்களுடன் இந்த தேர்தலுக்காக தயாராகி வருகிறது. தற்போது பாஜகவில் நடிகர் விஷால் சேரவிருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு நடிகர் விஷால் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

நடிகர் விஷால் சில தினங்களுக்குமுன் இந்தி நடிகை கங்கனாரானாவத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஷால் பாஜகவில் சேரவிருப்பதாகவும் அதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகனிடம் நேரம் ஒதுக்குமாறும் தகவல் வெளியாகியது. இதனை தொடர்ந்து விஷால் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியாகியது. ஆனால் நடிகர் விஷால் தரப்பிலிருந்து அவரது மேலாளர் ஹரி, விஷால் பாஜகவில் சேரவில்லை, பாஜக தலைவரை சந்திக்க நேரமும் கேட்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.

Advertisment

vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe