கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்புத்தளத்தில் இருந்து நடிகர் விஜயை சென்னை அழைத்துவந்த வருமான வரித்துறையினர், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விஜயின் வீட்டில் 23 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையும் நடத்தினர். இதற்கிடையில் என்எல்சி நிர்வாகம் மாஸ்டர் படத்திற்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்தது தவறு என பாஜகவினர் சூட்டிங் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படி நெடுக்கடிகள் விஜய்க்கு தொடர்ந்து வந்துகொண்டிருந்த நிலையில், சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதற்கிடையில் நெய்வேலியில் வேன் மீது ஏறி விஜய் செல்பி எடுத்து ரசிகர்களை குஷிபடுத்தினார். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரல் ஆனாது. அதுமட்டும் இல்லாமல் #திமுக_தலைவர்_விஜய் என்ற ஹேஸ்டேக்கும் திடீரென வைரல் ஆனது. இவை அனைத்தும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், நடிகர் விஜய் மற்றும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட போஸ்டர் தமிழகத்தில் பல இடத்தில் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியாவில் இரண்டுநாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இவ்வேலையில், "கோட்டையும் கொடியும் நொடியில் மாறும்! நீங்கள் அரசியலுக்கு வந்தால்!" என்று விஜயை ட்ரம்ப் அரசியலுக்கு அழைப்பதை போன்று போஸ்டர் தமிழகத்தில் பல பகுதிகளில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்டு அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.