மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற அவரது தந்தை முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் விஜய்.
இந்த விஷயத்தில் இருவரும் மாறுபட்ட கருத்துகளை கூறிய நிலையில்,நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களின் நிர்வாகிகளை சந்திக்கிறாராம்.
தற்போது மக்கள் இயக்க நிர்வாகிகள் விஜய் அலுவலகத்தில் உள்ளதாகவும், சுமார் 11 மணியவில் நிர்வாகிகளைச் சந்திக்கிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.