Skip to main content

பொன்னர் சங்கரை இயக்கியது மிகப்பெரிய பாக்கியம்: கலைஞர் நினைவிடத்தில் தியாகராஜன் கண்ணீர் பேட்டி

Published on 11/08/2018 | Edited on 11/08/2018
actor thiagarajan Prashanth



தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அங்கு கலைஞரின் மிகப்பெரிய படம் வைக்கப்பட்டு, தி.மு.க. கொடி நடப்பட்டுள்ளது. நினைவிடம் பூக்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து திமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று 3வது நாளாக அஞ்சலி செலுத்தனிர். 4வது நாளாக இன்றும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இன்று திரைப்பட நடிகர் தியாகராஜன், அவரது மகன் நடிகர் பிரசாந்த் ஆகியோர் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 
 

 

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், அவர் எழுதி பொன்னர் சங்கர் என்ற படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதனை வாழ்நாளில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். தினமும் அந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று வருவார். அவருடன் நாங்களும் அமர்ந்து பார்ப்போம். அப்படிப்பட்ட தலைவர் இன்று நம்முடன் இல்லை என்று கண்ணீர் சிந்தினார். 
 

 

 

பின்னர் பேசிய பிரசாந்த், கலைஞர் அய்யா என்னை எப்போதும் தம்பி என்று பாசமாக அழைப்பார். அவருடைய வசனத்தில் உருவான பொன்னர் சங்கர் படத்தில் நான் நடித்தது பெரிய பாக்கியமாக கருதுகிறேன். அவர் தற்போது நம்முடன் இல்லை. அவருடைய குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு மருத்துவமனையில் அனுமதி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
lollu sabha actor seshu in hospital

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் குணமடைய அவரது நெருங்கிய வட்டாரங்கள் உள்ளிட்ட ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Next Story

படிக்காதவன் பட குட்டி ரஜினி காலமானார்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
actor and director surya kiran passed away

தமிழில் குழந்தை நட்சத்திரமாக பல ஹிட் படங்களில் நடித்துள்ளவர் மாஸ்டர் சுரேஷ். கல்லுக்குள் ஈரம், மௌன கீதங்கள், படிக்காதவன், ரங்கா, மனிதன் என ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரில் நடித்து வந்த இவர் பின்பு சூரிய கிரண், என பெயரை மாற்றி கொண்டு இயக்குநராக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜு பாய், அத்தியாயம் 6 போன்ற  படங்களை இயக்கினார். இதனைத் தொடர்ந்து வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள அரசி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இவர் குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குநராக இரண்டு மாநில விரும் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் சமீப காலமாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்த சூரிய கிரண் (48) இன்று காலமானார். கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் பின்பு வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட அவர் காலை 11 மணியளவில் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.