ADVERTISEMENT

சமோசா சாப்பிட போய்ட்டாங்க... திமுக பற்றி மீண்டும் சர்ச்சை கருத்து கூறிய நடிகர் எஸ்.வி.சேகர்!

01:28 PM Dec 11, 2019 | Anonymous (not verified)

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்தார். அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும் என்று தெரிவித்து இருந்தனர். இந்த மசோதாவிற்கு மக்களவையில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சொந்த குடும்ப கட்சியிலேயே தன்னை எதிர்த்தா குடும்பத்துல இருக்கிறவங்க பதவியை பறிச்சு கட்சியைவிட்டு அனுப்பறவங்க குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்க்கறாங்களாம். ஐய்யோ ஐய்யோ. குடும்ப கட்சிக்கு நாட்டு நலனாமாம். ஆட்டுக்காக ஒநாய் அழுவுது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் திமுகவிற்கு எதிராக சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை தி மு க எதிர்ப்பதாக இருந்தால், எதிர்த்து வாக்களிக்காமல், வெளிநடப்பு செய்தது ஏன்? ஏன்னா பாராளுமன்றத்துக்கு வெளியே வண்டில சொமோஸா 50 பைசா குறச்சலா வித்தாங்களாம். அதான். என்று மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT