Advertisment

சூர்யா அப்படி என்ன தவறாகப் பேசிவிட்டார்? மு.தமிமுன்அன்சாரி

sss

ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று நாகை எம்.எல்.ஏவும், ம.ஜ.க பொதுச் செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 12.09.2020 அன்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு பதட்டம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தமிழகமே கவலை கொண்டது.

Advertisment

அந்த உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது என்பதே யதார்த்த உண்மையாகும்.

இந்திலையில் அவர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என முன்னாள் நீதிபதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அப்படி என்ன சூர்யா தவறாகப் பேசி விட்டார்? என்ற கேள்வி பரவலாக எதிரொலிக்கிறது. ஜனநாயக வழியில் மக்களின் உணர்வுகளை எதிரொலித்த நடிகர் சூர்யா மீது நடவடிக்கை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதோடு, இது கருத்துச் சுதந்திரத்தை நெறிக்கும் செயலாகவே கருதப்படும்.

Ad

அவரின் கருத்தை ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வதே சிறந்த ஜனநாயக முறையாக இருக்கும். எனவே அவர்மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

MLA mjk tamimmun ansari suriya actor neet exam issue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe