ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் உள்ளனர். படம் தயாரிப்பதற்காக இந்த நிறுவனம் ரூ 2 கோடி கடனாகப் பெற்றுள்ளது. கடனை அடைக்க ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்திற்கு கொடுத்த செக் ஒன்று பவுன்ஸ் ஆகியுள்ளது. அதனால், அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

Advertisment

actor

அந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்த போது சரத்குமார், ராதிகா, லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதனால் நிதிபதி அவர்களைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனால் அவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுலை 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.