Advertisment

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்திதற்காக போயஸ் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து நடிகர் ரஜினி புறப்படும்போது அங்கு கூடியிருந்த ஏரளமான ரசிகர்கள் பட்டாசு வெடித்து, அவர் கார் மீது பூக்கள் வீசி கொண்டாடினர். அதேபோல் கூட்டம் நடக்குமிடமான ராகவேந்திரா மண்டபத்துக்குள் நுழைந்தபோது, அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.