pon radhakrishnan

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனை வெள்ளிக்கிழமை நடிகர் ஆர்.கே.சுரேஷ் சந்தித்து, தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து பேசிய ஆர்.கே.சுரேஷ், மோடியை எனக்கு ரொம்ப பிடிக்கும். வரும் 11ஆம் தேதி மோடி தமிழகத்திற்கு வருவதே பெரிய மாற்றமாக இருக்கும். தமிழகத்திற்கு பல நல்ல காரியங்கள் பண்ணபோகிறோம். மோடி செய்த நல்ல திட்டங்கள் தெரியாமல் போய்விட்டன. ஆனால் மக்களிடம் போய் சேர்ந்துவிட்டது. சின்னச் சின்ன ஊர்களில் கூட மோடி நினைத்தது நடந்துள்ளது.

Advertisment

மக்கள் யாருமே கோ பேக் மோடி என்று டிரெண்ட் பண்ணுவதில்லை. அதற்கென்று ஒரு டீம் வைத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் இனிமேல் நடக்காது. என்னை மாதிரி பல பேர் திரையுலகில் இருந்து பாஜகவில் இணைய போகிறார்கள். வரும் தேர்தல் கண்டிப்பாக தமிழகத்தில் பெரிய மாற்றமாக இருக்கும் என்றார்.