Advertisment

நடிகர் பொன்னம்பலத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி வழங்கிய பா.ஜ.க. மாநிலத் தலைவர்!

actor Ponnambalam

சிறுநீரகக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர் பொன்னம்பலம். அவருடைய சிகிச்சைக்கு நடிகர்கள் கமல், ரஜினி உதவியதாகச் செய்திகள் வெளியாகின.

Advertisment

மேலும் இதுகுறித்து நடிகர் பொன்னம்பலம் கூறுகையில், தனக்கு 52 வயதாகிறது. உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன் நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் சேர்க்க பண உதவி செய்தார். அதனைத் தொடர்ந்து விஷால், கார்த்தி அடையாறில் உள்ள சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து ரஜினி, கமல் ஆகியோர் பேசி உதவி செய்தனர். எந்த உதவி வேண்டுமானாலும் அழைக்கவும் எனச் சொல்லி நம்பிக்கை அளித்தனர் எனத் தெரிவித்தார்.

Advertisment

தற்போது பொன்னம்பலம் வீட்டிலே ஒய்வு எடுத்துச் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகன் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அப்போது பா.ஜ.க. சார்பாக பொன்னம்பலத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் நிதியை வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேஷ் மற்றும் கலை- கலாச்சாரப் பிரிவு மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் ஆகியோர் உடனிருந்தனர்.

actor kamal ponnambalam rajini Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe