Published on 31/01/2020 | Edited on 31/01/2020
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் மக்களவை தொகுதியில் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் போட்டியிட்டார். அப்போது 50ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். சமீபத்தில் சினிமா தயாரிப்பாளர்கள் பெரிய ஹீரோக்களின் படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். அப்போது தான் சிறிய பட்ஜெட் படங்கள் கொஞ்சம் இலாபம் பார்க்க முடியும் என்றும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், புறநகர் படத்தின் பிரஸ் மீட் விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், மேடையில் எனக்கு முன் பேசியவர்கள், அவர் படங்களை ஏன் பண்டிகை காலத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும். சாதாரண நாட்களில் வெளியிடலாமே என்று பேசினார்கள். அவர், இவர் என்று ஏன் சொல்கிறார்கள், ஆனால் யாரும் பெயரை குறிப்பிட்டு சொல்லவே இல்லை. ஏன் அது ரஜினிகாந்த் என்று வெளிப்படையாக கூறிவிட வேண்டியது தானே என்ன பயம் உங்களுக்கு, எனக்கு தெரியவில்லை. மேலும், அவர் நன்றாகவே நடிக்கிறார், அதனால் வாய்ப்பு வருகிறது பணமும் நிறைய வருகிறது என்றும் ரஜினி குறித்து மன்சூர் அலி கான் அதிரடியாக பேசினார்.