பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இது மத அடிப்படையில் நாட்டை பிளவு படுத்துவதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் அரசியல் கட்சிகளை அல்லாத பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் இச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் தற்போது டெல்லியில் நடைபெற்றுவரும் போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.
இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பக்கத்தில், "வேற்றுமையிலும் ஒன்றுபட்ட இந்தியாவில், வெறுப்பின் பிள்ளைகள் தறிகெட்டுத் திரிவதை எப்படி அனுமதிப்பது. நிறுத்துங்கள். காலம் கடக்கும் முன் காரணம் குறித்து சிந்திக்கத் திரும்புங்கள்.மனிதர்களே வெறுப்பை போதிப்பார்கள், மதங்கள் இல்லை. முன்புபோல் மீண்டும் இந்தியா இந்த வெறியாட்டத்திலிருந்து மீண்டுவர விழைகிறேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.